மேலதிகமாக மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டதற்கமைய பல்கலைக்கழக வசதிகளை மேம்படுத்துவதற்கு கூடுதல் ஒதுக்கீடுகளை பெற்றுக்கொடுக்குமாறு கௌரவ பிரதமர் அறிவுறுத்தல்

பல்கலைக்கழக மாணவர்களின் கல்விக்காக இதுவரை வழங்கப்படும் நிதிக்கு மேலதிகமாக, இந்த கூடுதல் நிதியை  கட்டம் கட்டமாக பல்கலைக்கழக அமைப்புக்கு வெளியிடுமாறு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அறிவுறுத்தினார். சம்பந்தப்பட்ட முறையை பொது திரைசேறி மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் இணைந்து கலந்துரையாடலின் மூலம் தீர்மானித்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.
 
கொவிட்-19 தொற்றுக்கு மத்தியில் பல்பலைக்கழகத்தில் விரிவுரைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு விரிவுரையாளர்களதும், மாணவர்களதும் ஒத்துழைப்பு கிடைக்கும் என தெரிவித்த பேராசிரியர் சம்பத் அமரதுங்க அவர்கள், பல்கலைக்கழகங்களை மூடுதல் எனும் நடவடிக்கை மீண்டும் முன்னெடுக்கப்படாது என்றும் தெரிவித்தார்.
 
இதேவேளை,  இசெட் வெட்டுப்புள்ளி காரணமாக பல்கலைக்கழக அனுமதியை பெற முடியாத சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்காக  ஒரு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் அவர்கள் சுட்டிக்காட்டினார்.
 
அதற்கான தீர்வாக அரசாங்கம் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டால் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு அவர்களை இணைத்துக் கொள்ள முடியும் என கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக துணைவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் தெரிவித்தார்.
 
அதற்;கமைய இது தொடர்பில் அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பிக்குமாறு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அவர்களுக்கு அறிவுறுத்தினார்.
 
குறித்த கலந்துரையாடலில் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், பிரதமரின் செயலாளர் காமினி செனரத், கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கே. கபில சீ.கே.பெரேரா, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, பிரதமரின் மேலதிக செயலாளல் சமிந்த குலரத்ன, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் பேராசிரியர் பிரியந்த பிரேமகுமார மற்றும் அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts