நாட்டில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்ற நிலையில், நேற்று முன்தினம் மாத்திரம் 48 கோவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டன.
இலங்கையில் கோவிட் பரவல் ஆரம்பித்த நாள் முதல் நாளொன்றில் பதிவான அதிகூடிய மரணங்களின் எண்ணிக்கை இதுவாகும் இந்த 48 மரணங்களில் 18 மரணங்கள் வீடுகளிலேயே பதிவானவையாகும்.
இதேவேளை மொத்த தொற்றாளர்கள் 2 இலட்சத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில் நேற்று சனிக்கிழமை மாலை 6 மணி வரை நாட்டில் 2280 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
அதற்கமைய இதுவரை நாட்டில் 2 இலட்சத்து 1534 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் 1 இலட்சத்து 4212 தொற்றாளர்கள் புத்தாண்டு கொத்தணியில் இனங்காணப்பட்டவர்கள் என்று கோவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் மரணங்களை பொறுத்தவரை மே மாதம் 11 ஆம் திகதி இம்மாதம் 3 ஆம் திகதி வரை பதிவானவையாகும். இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்றைய தினம் பத்திரிகைகளில் இடம்பிடிக்கக்கூடிய செய்திகளின் தொகுப்புடன் வருகிறது பத்திரிகைகளின் கண்ணோட்டம்.