யாழ்  தர்மபுரத்தில் பாதயாத்திரீகர்கள் குழ!

 
வரலாற்றுப்பிரசித்திபெற்ற இலங்கையின் மிக நீண்ட கதிர்காம  பாதயாத்திரையாகக்கருதப்படும் வேல்சாமி தலைமையிலான பாதயாத்திரீகர்கள் இன்று(21)  திங்கட்கிழமை   இரவு   தர்மபுரத்தில் தங்குவார்கள்.
 
கடந்த 17ஆம் திகதி வியாழனன்று யாழ்ப்பாணம் செல்வச்சந்நதி ஆலயத்திலிருந்து பகல்11.15மணியளவில் வேல்சாமி தலைமையிலான குழுவினர் 54நாள் பயணத்தை பூஜை புனஸ்காரங்களுடன் ஆரம்பித்தனர்.
 
குழுவில் 52பக்தர்கள் அடங்குகின்றனர். முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகை அம்மனாலயத்தில்வைத்து மேலும் 50பேரளவில் இணையவுள்ளதாக அங்கிருந்து வேல்சாமி தெரிவிக்கின்றார்.
 
கடந்த4 தினங்களாக புத்தூர் இராமாவில் உசன்பளை கரந்தை ஆகிய கிராமங்களைத்தாண்டி இடையிடையே சிறுமழைக்கு மத்தியில்  இயக்கச்சி உமையாள்புரத்தை அடைகின்றோம்.
 
எம்முடன் லண்டனிலிருந்து இதற்கென வருகைதந்த கே.மணிவாசகர் நீர்கொழும்பைச்சேர்ந்த பெர்ணாண்டோ ஆகியோருடன் 52பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர். ஆலயங்களில் சரியைத் தொண்டுகளைச்செய்து பஜனையிலும் ஈடுபட்டுவருகின்றோம்.

Related posts