கிளிநொச்சி இரணைதீவுக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினர் (14) பயணித்துள்ளனர்.
அங்கு தங்கியிருக்கும் மக்களின் குடிதண்ணீர் விநியோகத்துக்காக ஓர் இரு சக்கர உழவு இயந்திரத்தையும் மக்களுக்காக அவர்கள் வழங்கி வைக்கவுள்ளனர் .
இரணை தீவுப் பகுதியில் உள்ள மக்களின் வாழ்விடங்களை விடுவிக்கக் கோரி 2017ஆம் ஆண்டு மே மாதம் முதல் இரணைமாதா நகரில் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த மக்கள் அக்கோரிக்கை நிறைவேறாத நிலையில் குறித்த தீவுக்குச் சென்று தரையிறங்கி தீவிலேயே போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்த மக்களின் பலவிதமான தேவைகளில் ஒவ் வொருவரும் ஓர் உதவிகளை மேற்கொண்டுவரும் நிலையில் வடக்கு மாகாண முதலமைச்சர் இன்று இந்தப் பகுதிக்கு நேரடியாகப் பயணித்துள்ளனர்.
அங்கு மக்கள் இயற்கைக் கடன்கழிப்பதற்கான ஏற்பாடுகளாக 10 கழிப்பறை வசதிகளையும் ஏற்பாடு செய்து வழங்கவுள்ளனர்.