நாளை வரவு செலவுத் திட்டத்திற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் அரசாங்கத்திடம் கையேந்தவுள்ளனர் ஏன் எமது வலிந்து காணாமலாக்கப்பட்டோர்களின் விடயங்களை பேசமுடியாது என குற்றம் சாட்டுகின்றார் அம்பாறை மாவட்ட வ.கா சங்க தலைவி தம்பிராசா செல்வராணி
அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின் இறுதி வாசிப்பு நடைபெற்று நாளைய தினம் அவையில் ஏகமனதாக விருப்புகளை கட்சிரீதியாக வழங்கவுள்ள நிலையில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் மற்றும் அரசியல் கைதிகளின் விடயங்கள் தொடர்பாகவும் எந்தவித சாதகமான பதில்களும் வழங்காத நிலை சம்பந்தமாக 04 ஆம் திகதி திருக்கோவில் 01 வாஹீஸ்டா வீதியில் அமைந்துள்ள உத்தியோக பூர்வ காரியாலயத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்
இவ்வருடத்திற்காக வரவு செலவு திட்டத்தை நாளைய தினம் இறுதி வாசிப்பு நடைபெறும் சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் அதற்கு ஆதரவு வழங்கி அரசாங்கத்திடம் கையேந்தவுள்ளனர் ஆனால் அவர்கள் வடகிழக்கில் உள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டோர் அனுராதபுரத்தில் உள்ள அரசியல் கைதிகள் மற்றும் காணி தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் ஏன் அரசாங்கத்திடம் கூறி அதற்கான தீர்வுகளை பெற்றுத்தர மறுக்கின்றனர் ஆனால் அவர்கள் நினைத்திருந்தால் அரசாங்கத்துடன் ஒரு உடன்படிக்கையின் அடிப்படையில் கைச்சாத்திட்டு பெற்றுத்தரமுடிந்திருக்கும்
ஆனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் அரசாங்கத்திடம் கையேந்தும் நிலையே உள்ளது கடந்த 40 வது ஐ நா அமர்வின் போது எமது மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக பேசாமல் இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கும் நோக்கில் அவர்களுக்கு ஆதரவு வழங்கியுள்ளமை நாம் அனைவரும் அறிந்தவிடயமே அந்தவகையில் இந்த வரவு செலவுத்திட்டத்திலும் எம்மை புறக்கணித்துள்ளனர் ஆகையினால் த.தே.கூட்டமைப்பின் பிரதிநிதிகள் நாளைய தினம் நடைபெறும் பாராளுமன்ற அமர்வில் காணாமலாக்கப்பட்டவர்களை அரசியல் கைதிகளை விடுதலையை வலியுறுத்தி நிபந்தனைகளை முன்வைத்து வரவு செலவு திட்டத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கூறிக்கொள்கின்றேன் என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.