மட்டக்களப்பு அம்பாரை மாவட்ட சைக்கிள் ஓட்ட வீரர்களை ஒன்றிணைத்து மாபெரும் துவிசக்கர வண்டி போட்டியைபெரியகல்லாறு வலம்புரி விளையாட்டுக்கழகம் சிறப்பாக இன்று காலை (13) நடாத்தி முடித்துள்ளது. பெரியகல்லாறுசர்வார்த்த ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் முன்பாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உப்பிள்குணரெட்ண சம்பிரதாயபூர்வமாக போட்டியை ஆரம்பித்து வைத்தார்.
கழகத்தின் தலைவர் சி.கோகுலராஜ் தலைமையில் நடைபெற்ற இப்போட்டி பெரியகல்லாற்றில் இருந்து கல்மனைமட்டக்களப்பு பிரதான வீதியூடாக அரம்பித்து கல்லடி அரசைடி சுற்றுவட்டம் வரை சென்று மீண்டும் பெரியகல்லாற்றைவந்தடைந்தது.
களுவாங்சிக்குடி பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியும் போக்குவரத்துப் பொறுப்பதிகாரியம் இணைந்து ஆரம்பம் முதல்இறுதிவரை உரிய வீதிப் பாதுகாப்பை மிகவும் சிறப்பாக வழங்கிவைத்தனர்.
இப்போட்டியில் முதலாம் இடத்தை மட்டக்களப்பு சின்ன ஊறணியைச் சேர்ந்த ஐ.ராஜ்குமார் என்ற இளைஞர் பெற்றுவெற்றிவாகை சூடிக் கொண்டார்.. இரண்டாம் மூன்றாம் இடங்களை முறையே முறக்கொட்டான்சேனையைச் சேர்ந்தவிபுசன், மற்றும் களுவன்கேணியைச் சேர்ந்த ஏ.சுதர்சன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். 23 வீரர்கள் பங்குகொண்டஇப்போட்டியில் முதல் 13 பேருக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டன.