வரலாற்றுப்பிரசித்திபெற்ற கதிர்காம கந்தன் ஆலயத்தின் கொடியேற்றநாளான நேற்றுமுன்தினம் வழமைக்குமாறாக பல்லாயிரக்கணக்கான அடியார்கள் அன்னதானத்திற்கு வருகைதந்திருந்தனர் என்று கதிர்காம இந்து யாத்திரிகர் விடுதியில் சிவபூமி அன்னதான தொண்டர் சபையினரின் என இணைப்பாளர் எஸ்.ஞானசுந்தரம் தெரிவித்தார்.
17வது வருடமாக தொடர்ந்து இவ்வன்னதான நிகழ்வை நடாத்திவரும் ஞானசுந்தரம் தெரிவிக்கையில்:
வடக்கு கிழக்கு மலையகம் உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலுமிருந்து பாதயாத்திரை மேற்கொண்டு பல ஆயிரக்கணக்கானோர் இங்குவருகைதந்துள்ளனர்.
அதனால் முதல்நாளே அன்னதானத்தைத் தொடங்கியுள்ளோம்.தொடர்ந்து தீர்த்தம் நிறைவடையும்வரை மதியம் இரவு அன்னதானமும் தேநீரும் இந்த விடுதியில் வழங்கப்படும்.என்னுடன் பிரதித்தலைவர் ரி.குழந்தைவேல் உடனிருந்து செயற்படுவது மகிழ்ச்சியையும் தம்பையும் கொடுக்கின்றது.
எமது தலைவரும் இலங்கை இந்துமாமன்றத்தின் தலைவருமான எம்.தவயோகராசா பிரதித்தலைவர் ரி.குழந்தைவேல் செயலாளர் என்.பேரின்பநாயகம் பொருளாளர் எ.ஆனந்தராசா ஆகியோர் வழமைபோல் தொடர்ந்து அன்னதானம் வழங்குவதில் பெரும்பங்கு வகிக்கின்றனர்.
நாம் திருக்கேதீஸ்வரத்திலும் அதேவேளை கதிர்காமத்திலும் இதனை பல்லாண்டுகாலமாகச்செய்துவருகின் றோம்.அதற்கு உதவும் வர்த்தகர்கள் நலன்விரும்பிகள் அனைவருக்கும் நன்றிகள்.மரக்கறிவிலைகள் உச்சக்கட்டத்திலிருந்தபோதிலும் எமது அன்னதானம் வழமைபோன்று தொடர்ந்து எவ்விதகட்டுப்பாடுமில்லாமல் வழங்கப்படும். என்றார்.
அன்னதானத்திற்கு உதவுபவர்கள் தெண்டர் சபைக்கு உதவலாம். தொடர்புகட்கு 0779351436