கடந்த முப்பது வருடகால யுத்தத்தின் போது சரணடைந்து கைது செய்யப்பட்டு சிறைகளில அடைக்கப்பட்டுள்ள கைதிகளை விரைவில் விடுதலை செய்யவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதியின் பிரதம அமைப்பாளரும் முன்னால் பிரதியமைச்சருமான சோ.கணேசமூர்த்தி இன்று தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது
பாதிக்கப்பட்ட தமிழ் அரசியில் கைதிகள் இதுவரை காலமும் காலம் கடந்தும் எவ்வித விசாரணைகள் இன்றி குறிப்பிட்ட சிலர் விடுவிக்கப்பட்ட நிலையிலும் பல கைதிகள் தடுத்து வைக்கப்பட்ட நிலையிலும் இருப்பது மிகவும் கவலையழிப்பதாக தெரிவித்தார். இவர்கள் அனைவரையும் விரைவில் விடுவிப்பதற்கு அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுடன் கலந்துரையாடியதாகவும்; விரைவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து கைதிகளையும் விடுவிற்பதற்கான நடவடிக்கை தான் எடுத்து தருவதாக பிரதம மந்திரி அவர்கள் உறுதியழித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இவ்விடயம் பற்றி நீதி மற்றும் சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரல அவர்களுக்கு இவர்களை விடுவிற்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றிய கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்