அமரர் நாகேந்திரன் அவர்களின் ஞாபகார்த்த கிறிக்கட் மென்பந்து சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி இன்று. ஒலுவில் கழகம் 50,000.00; பெற்றுக்கொண்டது

துறைநீலாவணைக் கிராமத்தின் சமூகமுன்னோடியும் மத்தியவிளையாட்டுக் கழகத்தின் ஸ்தாபகரும் சமூகசேவகருமான அமரர் நாகேந்திரன் அவர்களின் ஞாபகார்த்தக் கிண்ணத்தினை ஒலுவில் லெவன்ஸ்டார் விளையாட்டுக்கழகம் பெற்றுக்கொண்டது.

அமரர் நாகேந்திரன் அவர்களின் ஞாபகார்த்த கிறிக்கட் மென்பந்து சுற்றுப்போட்டி கடந்த   25 ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமானது இதன் இறுதிப்போட்டி 29 ஆம்திகதி சனிக்கிழமை கழகத்தின் உப தலைவர் த.ஜீவகுமார் தலைமையில் நடைபெற்றது.
மத்தியவிளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டிலும் அமரர் நாகேந்திரன் அவர்களின் குடும்பத்தினரின் ஒழுங்கமைப்பிலும் இந்நிகழ்வு இடம்பெற்றது.
அமரர் நாகேந்திரன் ஞாபகார்த்த கிறிக்கட்மென்பந்து சுற்றுப்போட்டிக்கு மட்டக்களப்பு அம்பாரை மாவட்டங்களைச்சேர்ந்த 40 இற்கு மேற்பட்ட விளையாட்டுக்கழகங்கள் கலந்துகொண்டிருந்தன .
இப்போட்டியில் இறுதிப்போட்டிக்கு துறைநீலாவணை மத்தியவிளையாட்டுக்கழகமும் ஒலுவில் லெவன்ஸ்டார் விளையாட்டுக்கழகமும் தெரிவாகி இருந்தது.
 இவ் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஒலுவில் லெவன்ஸ்டார் விளையாட்டுக்கழகம் சம்பியனாகத் தெரிவாகியதுடன் அணிக்கு 50,000  பணப்பரிசும் முதலாவது வெற்றிக்கிண்ணமும்  கொடுக்கப்பட்டது. இரண்டாம் இடம் பெற்ற துறைநீலாவணை மத்தியவிளையாட்டுக்கழக அணிக்கு 20,000 பணப்பரிசும் வெற்றிக்கிண்ணமும் வழங்கிவைக்கப்பட்டது.
 .
இந்த நிகழ்வில் அமரர் நாகேந்திரன் அவர்களின் பாரியார் திருமதி நேசமணி நாகேந்திரன்,  முத்து மாரியம்மன் ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ கு.நல்லராசா குருக்கள், அமரர் ஞாகேந்திரன் அவர்களின் மூத்தபுதல்வர் ஓய்வுபெற்ற விஞ்ஞானவள முகாமையாளர் நா.புள்ளநாயகம், திருக்கோவில் வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம், பிரதேசசபை உறுப்பினர் க.சரவணமுத்து, ஆசிரியர் ஆ. சர்வேஸ்வரன், அமரர் நாகேந்திரன் அவரதுபேரன் பொறியியலாளர் ஆ.பவித்திரன், பொதுச்சுகாதார பரிசோதகர் பி.இளங்கோ,  சிறுவர் பாதுகாப்பு உத்தியோத்தர் தி.தயாளன், சமூகசேவை உத்தியோகத்தர் சிவகுமார், கிராமசேவகர்களான பி.புனிதன்,கே.சுரேஸ் உட்பட கழக உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Related posts