தெஹியோவிட்ட – டெனிஸ்வத்த தோட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 48 வீடுகளுக்கான நிர்மாணப் பணிகளில் குளறுபடிகள் இடம்பெற்றுள்ளன.
2016 ஆம் ஆண்டு மே மாதம் தெஹியோவிட்ட – டெனிஸ்வத்த தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் மூவர் உயிரிழந்தனர்.
இதன் பின்னர் அங்கிருந்த 48 குடும்பங்களுக்காக தோட்டத்தில் 48 வீடுகள் புதிதாக கட்டப்பட்டுள்ளன.
வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில், இந்த வீடுகள் எப்போது உடைந்து வீழும் என்ற அபாயம் நிலவுகின்றமை தொடர்பில் நேற்று செய்தி வௌியிட்டிருந்தது.
காணி தெரிவு மற்றும் உரிய வடிகாண் கட்டமைப்பு இன்றி திட்டமிடாமல் இந்த வீடுகள் அமைக்கப்பட்டுள்ளமை இதன் மூலம் தௌிவாகின்றது.
பாதுகாப்பற்ற இந்த புதிய வீடுகளில் தங்க முடியாமையினால் தோட்டத்தில் உள்ள இறப்பர் தொழிற்சாலைக்கு அருகில் சிறிய கொட்டில்களை அமைந்து கடந்த இரண்டு வருடங்களாக இந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
மக்கள் பணத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ள இந்த வீடமைப்பு திட்டத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளுக்கு யார் பொறுப்புக்கூறுவது?
தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் கீழ் இயங்கும் பெருந்தோட்ட மனித அபிவிருத்தி ஸ்தாபனம் மூலமே இந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளன.