வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் நீரோடையில் இருந்து சடலமாக மீட்பு

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட 38ம் கிராமம் நவகிரி நகர் பிரதேசத்தைச் சேர்ந்த ஏழு பிள்ளைகளின் தந்தையான அமரசிங்கம் சுந்தரலிங்கம் வயது (55) என்பவர் நேற்று மாலை நீரோடையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
 
நேற்று முன்தினம் மாலைவேளையில் தனது வீட்டிருந்து வெளியில் செல்வதாக தனது மனைவியிடம் கூறிச் சென்றவர் பின்னர் இரவு வேளையாகியும் வீடு திரும்பாத நிலையில் நேற்று மாலை கால்நடைகளை மேச்சலில் ஈடுபடுத்திக்கொண்டிருந்தவர் ஒருவர் கண்டதனையடுத்து வயலுக்கு அருகில் உள்ள நீரோடையிலிருந்து அவர் செலுத்திச்சென்ற துவிச்சக்கரவண்டியுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் வி.தியாகேஸ்வரன் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்ல பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts