ரயில் சாரதிகள் மற்றும் காப்பாளர்கள் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டம் காரமணாக இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் சேவையில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் ரயில் பயணிகளின் நன்மை கருத்திற்கொண்டு விரைவாக சேவையை வழங்கும் நோக்கில், அனைத்து இ.பொ.ச. பேருந்துகளும் அதன் வீதி அனுமதிப்பத்திரத்தை கருத்திற்கொள்ளாது சேவையில் ஈடுட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அனுமதியானது ரயில்வே தொழிற்சங்க நடவடிக்கைகள் முடியும் வரை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் எப்பொழுது வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.