வெள்ளை கெக்கரி செய்கை வெற்றியளித்துள்ளது

எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு  
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை பிரதேசத்தில் வெள்ளை கெக்கரி (ஹிக்கும்பர்) பயிற்செய்கை அதிகபடியான விளைச்சலை இம்முறை பெற்றுள்ளதாக விவசாகிகள் மகிழ்ச்சியுடன் அசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திருமதி கலாமதி பத்மராஜாவிடம் தெரிவித்தனர்.
 
வெள்ளை கெக்கரி செய்கைக்கு பொருத்தமான இடமாக அடையாளப்படுத்தப்பட்டதினால் மாங்கேணி பிரதேசத்தில் வெள்ளை கெக்கரி பதனிடும் நிலையம் ஒன்று நிரந்தரமாக அமைப்பதற்கு அரச காணி ஒன்றை பெற்றுதருமாறு கெலிஸ் நிறுவன உத்தியோகத்தர்கள் வேண்டுகொள் விடுக்கப்பட்டுள்ளது.
 
அரசாங்க அதிபர் அன்மையில் வாகரைக்கான களவிஐம் ஒன்றினைமேற்கொண்டபோது தற்போது இயங்கிவருகின்ற வெள்ளை கெக்கரி (ஹிக்கும்பர்) பதனிடும் நிலையத்தை பார்வையிட்டு விவசாயிகளுடன் தங்களின் நிலமைகளை கேட்டு அறிந்தார்.
 
அதிகளவு வருமானத்தினை பெற்றுத்தருகின்ற தொழிலாக இத்தொழில் உள்ளதாகவும் நமது மாவட்டத்தினை தாண்டியும் அம்பாறை திருகோணமலை பகுதிகளை சார்ந்த விவசாயிகளின் உற்ப்பத்திகளையும் மாங்கேணி நிலையத்திலேயே பதனிடப்படுகின்றது அங்கு பதனிடப்பட்ட வெள்ளை கெக்கரி (ஹிக்கும்பர்) கொழும்பிற்கு கொண்டு சென்று பொதியிட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிசெய்யப்பட்டு வருவதாக அன் நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
வாகரை பிரதேசத்தினை சேர்ந்த இளைஞர் யூவதிகள் அதிகளவானோர்கள் வேலைவாய்ப்பினை பெற்றுள்ளதாக வாகர பிரதேசசெயலாளர் எஸ்.ஹரன் தெரிவித்தார்.
????????????????????????????????????

Related posts