வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலய மாணவன் தியாகராஜா சஜந் 9; ஏ சித்திபெற்று சாதனை வலயக்கல்விப்பணிப்பாளர் பாராட்டு

2021 ஆண்டு நடைபெற்ற க.பொ.த.சாதாரணதரப் பரீட்சையில் சம்மாந்துறை கல்விவலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலய மாணவன் தியாகராஜா சஜந் 9 பாடங்களிலும் ஏ சித்திபெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற பரீட்சைக்கான பெறுபேறுகள்; வெளியாகியிருந்த போதும் ஒரு பாடத்திற்கான பெறுபேறு வெளியிடப்படாமல் இருந்தது அப்பாடம் இம் மாதம் வெளியான நிலையில் 9 பாடங்களும் ஏ சித்திபெற்று பாடசாலைக்குப் ;பெருமைசேர்த்ததுடன் வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் என்.பிரபாகர் தெரிவித்தார்.

அதேவேளை இப்பாடசாலையில் தோற்றிய மாணவர்களில் 8ஏ,பி  7ஏ 6 ஏ 5ஏ போன்ற சித்திகளைப் பெற்று இருப்பதுடன் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 19 பேர் தோற்றி 14 பேர்  உயர்தரம் கற்பதற்கு  தகுதிபெற்று இருப்பதுடன்; 74 வீதமான மாணவர்கள் சித்திபெற்று இருப்பதாக அதிபர் தெரிவித்தார்.

அதேவேளை இம்மாணவர்களுக்கான செயற்பாடுகளை முன்னெடுக்க உதவிய  வலயக்கல்விப்பணிப்பாளர் எம் .எஸ்.எஸ் நஜீம் மற்றும் பிரதிக்கல்விப்பணிப்பாளர்கள் உதவிக்கல்விப்பணிப்பாளர்கள் கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஆசிரிய ஆலோசகர் மற்றும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் அதிபர் நன்றியினைத் தெரிவித்துள்ளார்

அதே வேளை 9 ஏ சித்தி பெற்ற மாணவனுக்கும் அதிபர் மற்றும் வழிப்படுத்திய ஆசிரியர்களுக்கும் வலயக்கல்விப் பணிப்பாளர் .எம் .எஸ்.எஸ் நஜீம் பாராட்டுத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts