ஸ்ரீ சித்தானைக்குட்டிசுவாமியின் 70வது குருபூஜைநாளை14இல்..15பேர் மாத்திரமே அனுமதி: பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு!

சித்தருள் சித்தர் சித்தர் ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 70ஆவது குருபூஜை, நாளை  சனிக்கிழமை 14ஆம் திகதியாகும்.
 
 சுவாமிகள் சமாதியடைந்த காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி ஜீவசமாதி ஆலய மடாலயத்தில், ஊர்வலமும் ,  மகாயாகமும் ,குருபூஜை வழிபாடும், அன்னதானமும் வருடாந்தம் நடைபெறுவது வழக்கம்.
 
இம்முறை  நாட்டில் மிகவேகமாக பரவிவருகின்ற கொரோனா நோய் காரணமாக ஸ்ரீ போகரின் அவதாரமாகிய ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 70வது குருபூசை நிகழ்வானது, மிகுந்த கட்டுப்பாடுகளுடன் யாகமும் ,குருபூஜையும் மாத்திரமே இடம்பெறவுள்ளது.
 
இது சம்பந்தமாக, சுகாதார அதிகாரிகளுடன் ஜீவசமாதி ஆலய பரிபாலன சபை நிருவாகத்தினர் கலந்துரையாடல் நடைபெற்றது.
 
அதன்படி, அடியவர்கள்   இன்றும் (13) , நாளையும் (14) திகதிகளில் ஆலயத்திற்கு வர அனுமதிக்கப்படமாட்டார்கள்.
 
நிர்வாகசபை மற்றும் குருக்கள் உட்பட 15பேர் மாத்திரம் ஆலயத்திற்குள் அனுமதிக்கப்பட்டு சுவாமியின் யாகமும், குருபூஜையும்  இடம்பெறவுள்ளது.
 
எந்தவித பூசை மற்றும் அன்னதான பொருட்களை ஆலயத்திற்கு வழங்க முடியாது, அதேபோல் எந்தவித பிரசாதமும் வெளியில் எடுத்துச்செல்லவும் முடியாது.

தற்கால சூழ்நிலையை மனதில் கொண்டு அனைத்து அடியவர்களும் இதனை ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றோம் என நிருவாகம் அறிவித்துள்ளது.
 
ஆலயத்தில் இடம்பெறும் நிகழ்வு  karaitivu webteam  ஊடாக நேரடியாக வழங்கப்படவுள்ளது. ஆகவே அடியவர்கள் வீட்டில் இருந்து வழிபாட்டில் ஈடுபடுமாறு பணிவுடன் வேண்டிக்கொள்கிறோம்.
 
ஆலயத்திற்கு வந்து நீங்களும் இடைஞ்சலுக்குள்ளாகி, ஆலயத்தையும் இடைஞ்சலுக்கு உள்ளாக்க வேண்டாமென மீண்டும் மீண்டும் அடியவர்களை வேண்டி நிற்பதோடு குருபூசை மற்றும் ஆலய செயற்பாடுகளுக்காக இவ்வருடமும் நிதியுதவி நல்கிய அனைத்து மெய் அடியார்களுக்கும் சித்தரின் குருவருள் கடாட்சம் கிடைக்க பிரார்த்திப்பதோடு மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்…

சுவாமியின் குருபூசையை முன்னிட்டு ,வழமைபோல் இவ்வருடமும் வசதிகுறைந்த மக்களுக்கு மிகவிரைவில் உலர் உணவு பொதிகள் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம் .
 
செல்லும் பாதை வேறுபட்டதாக இருப்பினும் அடையும் இடம் உன்னதமானதாய் அமையும்.உங்கள் கைங்கரியங்கள் உயரிய நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுமென தெரிவித்துக்கொள்கிறோம். என்று நிருவாகம் அறிவித்துள்ளது.

Related posts