1 கிலோ மீற்றர் கொங்கிறீட் வீதிக்கு அமைச்சர் வியாழேந்திரனால் அடிக்கல் வைப்பு

ஒரு லட்சம் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்தல் எனும் வேலைத் திட்டத்தின் கீழ்  மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேசத்திலுள்ள சத்துருகொண்டான் கிராமத்தில் 1 கிலோ மீற்றர் கொங்கிறீட் வீதி அமைக்கும் ஆரம்ப பணியினை ஞாயிற்றுக்கிழமை (22)  இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் அடிக்கல் வைத்து ஆரம்பித்து வைத்தார்.
 
கிராமிய வீதிகளை கொங்கிரீட் வீதிகளாக மாற்றும் திட்டத்தின் கீழ் சத்துருகொண்டான் கிராமத்திலுள்ள கும்பிளாமடு  கடற்கரை வீதி சுமார்  2 கோடி 60 இலட்சம் ரூபா செலவு மதிப்பீட்டில்  1 கிலோ மீற்றர் தூரத்திற்கு இக் கொங்கிறீட்வீதி நிர்மானிக்கப்படவுள்ளது.
 
இவ் வீதி  மிகவும் மோசமான நிலையில்,  மக்கள் பயணம் செய்ய சிரமங்கைளை எதிர் நோக்கியிருந்த நிலையில் இவ் வீதி கொங்கிரீட் விதியாக அமைக்கப்படவுள்ளது
 
 
இதன் போது அங்கு மாங்கன்றும் அமைச்சரினால் நடப்பட்டது.
 
இவ் ஆரம்ப நிகழ்வில்  இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், வீதி அபிவிருத்தி அதிகாரசயின் மாகாண பணிப்பாளர் அலுவக பொறியியலாளர்  மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தார்கள், முற்போக்கு தமிழர் அமைப்பின் இணைப்பாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Related posts