மட்டக்களப்பு மாவட்டத்தில் 12000 ஆசிரியர்களில் இதுவரையும் 7000 பேருக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 65024 தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் நா.மயூரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை கடந்த 24 மணித்தியாலத்தில் 79 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அதன்படி இதுவரை மாவட்டத்தில் 7339 கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு,100 மரணங்கள் சம்பவித்துள்ளன. தொடர்ந்தும் வைத்தியசாலையில் 946 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 5236 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 12000 ஆசிரியர்களில் 7000 பேருக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளது. மட்டுமாவட்டத்தில் இதுவரை 65024 தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதென பிராந்திய சுகாதார பணிப்பாளர் நா.மயூரன் இன்று(13)இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.