12000 ஆசிரியர்களில் இதுவரையும் 7000 பேருக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 65024 தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் நா.மயூரன் தெரிவித்தார்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 12000 ஆசிரியர்களில் இதுவரையும் 7000 பேருக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 65024 தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் நா.மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை கடந்த 24 மணித்தியாலத்தில் 79 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அதன்படி இதுவரை மாவட்டத்தில் 7339 கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு,100 மரணங்கள் சம்பவித்துள்ளன. தொடர்ந்தும் வைத்தியசாலையில் 946 பேர்  சிகிச்சை பெற்றுவருகின்றனர். 5236 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ளனர்.

கொரோனா 3ம் அலை காரணமாக 6356 பேர் தொற்றுக்குள்ளாகியதுடன் 91 பேர் மரணமடைந்தனர்.கடந்த மாதம் 3386 பேரும் கடந்த வாரம் 593 பேரும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். காத்தான்குடி சுகாதார பகுதியில் 3 பிரிவகள் இன்று விடுவிக்கப்படவள்ளதோடு மாமாங்கம் கிராம உத்தியோகத்தர் பிரிவு  இன்னும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுவருவதால் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்படவுள்ளது.
3ம் கட்டமாக மட்டு மாவட்டத்திற்கு கிடைக்கப்பெற்ற 50000 தடுப்பூசிகளில் 37024 தடுப்பூசிகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளது. 2ம் கட்டமாக வழங்கப்பட்ட ஊசிகள் 14981 ஊசிகள் ஏற்றப்பட்டுள்து.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 12000 ஆசிரியர்களில் 7000 பேருக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளது. மட்டுமாவட்டத்தில் இதுவரை 65024 தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதென பிராந்திய சுகாதார பணிப்பாளர் நா.மயூரன் இன்று(13)இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

Related posts