தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நாளாந்தம் 150 மில்லியன் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தபால் தொழிற் சங்கத்தினருடன் நாளை தீர்மானம் மிக்க பேச்சுவார்த்தையொன்றை நடத்தவுள்ளதாக தபால்மா அதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்தார்.
இது தொடர்பில் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சந்தன பண்டாரவிடம் நியூஸ்பெர்ஸ்ட் வினவியது.
பேச்சுவார்த்தை தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லையென அவர் குறிப்பிட்டார்.
கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட தபால் தொழிற்சங்கத்தினரின் பணிப்பகிஷ்கரிப்பு ஏழாவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது