2020இல் முழு இலங்கைக்குமே முன்னுதாரணசபையாக எமதுசபைவிளங்கும்.

நாம் 22மாதங்களை கடந்துள்ளோம்.எமது கருத்தொருமித்த செயற்பாட்டால் வடகிழக்கில் முன்னணி சiபாயக விளங்குகின்றோம். 2020இல் முழுஇலங்கைக்கும் முன்னுதாரணசபையாக விளங்க அனைவரும் தொடர்ந்து கைகோர்க்கவேண்டும்.
 
இவ்வாறு காரைதீவு பிரதேசசபையின் ஆண்டிறுதி அமர்வில் உரையாற்றிய தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.
 
சபையின் 22வது மாதாந்த அதேவேளை ஆண்டிறுதி அமர்வு (16) திங்கட்கிழமை சபாமண்டபத்தில் தவிசாளர் தலைமையில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
 
உறுப்பினர்எ.ஆர்.எம்.பஸ்மீர் உரையாற்றுகையில்:
எமது கிராமத்தில் வெள்ளஅனர்த்தம் நிகழ்ந்தபோது தவிசாளர் தலைமையில் மக்களுக்கு சமைத்த உணவை வழங்கியமை மேலும் உறுப்பினர்களான காண்டீபன் ஜெயராணி அக்கா ஆகியோர் சொந்தநிதியில் சமைத்தஉணவைழங்கியமை தவிசாளர் அந்தநிதியைத்திருவதாகவும் அதில் ஒரு பகுதியை உறுப்பினர் நேசராசா தருவதாகக்கூறியும் உறுப்பினர் காண்டீபன் அதனை பெருந்தன்மையுடன் மறுத்து தானே ஏற்றுக்கொள்வதாகவும் கூறியமை உபதவிசாளர் ஜாகீர் தனது சொந்தநிதியில்மாளிகைக்காட்டில் மோசமான கிறவல்வீதிக்கு கிறசர் தூளைப்போட்டமை வரை எத்தகைய தாராளமனத்தைக்காட்டுகி;றது.
உண்மையில்இச்சபை உறுப்பினர் என்ற வகையில்நான் பெருமையடைகின்றேன்.
 
அதற்கு தவிசாளர்  ஜெயசிறில் பதிலளித்துப்பேசுகையில்:
 
ஒரு மனிதனின் கருவறை முதல் கல்லறை வரை பிரதேசசபையின் சேவைகள் அமையவேண்டும். அந்தஅடிப்படையில்தான் அனர்த்தவேளைகளில் தேவையான உதவிகளைச்செய்து சமைத்தஉணவையும் வழங்கினோம்.அதேபோல் உறுப்பினர்களும் செய்தார்கள். இது எமது கடமையின்பாற்பட்டசேவை. என்றார்.
 
உபதவிசாளர் எ.எம்.ஜாகீர் உறுப்பினர்களான எம்.இஸ்மாயில் எ.ஜலீல்  ஆகியோர் மின்சார ஊழியர்கள் சபைஉறுப்பினர்களை மதித்து மக்கள்சேவையாற்றவேண்டும். என்றனர்.
உறுப்பினர்களான ச.நேசராசா த.மோகனதாஸ் சி.ஜெயராணி மு.காண்டீபன் இ.மோகன் ஆ.பூபாலரெத்தினம் எம்.பஸ்மீர் எ.ஜலீல் எம்.இஸ்மாயில் உள்ளிட்ட அனைவரும் செயலாளரின்செயற்பாடு பற்றிப்பேசினர்.
 
உறுப்பினர் எம்.றனீஸ் தவிர அனைத்து உறுப்பினர்களும் ‘சபையின் செயற்பாட்டிற்கு அடுத்தவருடம் முதல் கூடிய நிறைவான சேவையை சபையின் செயலாளர் ஆற்றமுன்வரவேண்டும். கடந்தவை கடந்தவையாகட்டும். இனி புதிய ஊழியர்களை நியமிப்பது தொடக்கம் மக்களுக்கான அனைத்துசேவைகளை வழங்குவது வரை அனைத்திலும் செயலாளர் ஒத்துழைக்கவேண்டும்’ எனக்கேட்டுக்கொண்டனர்.
 
மேலும்  வருடஇறுதியில்தரம்  புலமைப்பரிசில்பரீட்சைசித்திபெற்ற மாணவர்களை கௌரவிக்கும் விழா மற்றும் முதியோருக்கு நுளம்புவலை விநியோகித்தல் போன்றவற்றிற்கும் ஒத்துழைக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.
 

Related posts