உள்ளுராட்சிமன்ற பெண் உறுப்பினர்களுக்கு 4நாள் வதிவிடப்பயிற்சிப்பட்டறை!

2018ஆம் ஆண்டு உள்ளுராட்சி மன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட பெண் உறுப்பினர்களுக்கான நான்கு நாள் வதிவிட பயிற்சிப்பட்டறையொன்றை கண்டி மனித அபிவிருத்தி தாபனமும், பெண்கள் ஒத்துழைப்பு முன்னணியும் இணைந்து கண்டி ரிவெடெல் விடுதியில் நடாத்தியது. 
 
இப்பயிற்சிப்பட்டறையில் அம்பாறை நுவரெலியா, கண்டி, மாத்தளை, அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள் 35 பேர் பங்குபற்றினார்கள். 
கடந்த நான்கு தினங்களாக நடைபெற்ற இப்பட்டறை நேற்று(15) மாலை நிறைவுற்றது.
 
இதில் பால்நிலை சமத்துவம், அரசியலும் பெண் தலைமைத்துவமும், ஊடகம் தொடர்பான பயிற்சி மற்றும் மனித உரிமை, அடிப்படை உரிமையும் சர்வதேச சட்டங்களும் ஆகிய தலைப்புக்களில் விரிவுரைகளும் பயிற்சிகளும் நடைபெற்றது.  
 
இப்பயிற்சியின் வளவாளர்களாக மனித அபிவிருத்தி தாபனத்தின் தலைவர் பி.பி.சிவப்பிரகாசம்  பெண்கள் ஊடக அமைப்பின் பிரதிநிதி .வி.வீரசிங்கம்  பெண்கள் ஒத்துழைப்பு முன்னணியின் செயலாளர் திருமதி.பொ.லோகேஸ்வரி  மற்றும் சட்டதரணி.ஏ.செல்வராஜ்  கலந்து கொண்டு விரிவுரையாற்றினார்கள்.
 
தாம் தெரிவுசெய்யப்பட்ட காலம் தொடக்கம் இதுவரை இப்படிப்பட்ட மிகவும் பெறுமதிவாய்ந்த ஒரு பயிற்சிப்பட்டறையை தாம் சந்தித்ததில்லையெனவும் தமக்குத்தெரியாத பலவிடயங்கள் இப்படறைமூலம்அறியக்கூடியதாயிருந்தது எனவே ஓழங்கமைத்தவர்களுக்கு நன்றிகள் என்று பங்குபற்றுனர்கள் ஒருமித்தகுரலில் அங்கு கருத்துரைத்தனர்.
rpt

Related posts