கடந்த நாடாளுமன்றத்தில் பதவி வகித்த 208 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இம்முறை பொதுத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இவர்களில் 10 பேர் தேசியப்பட்டியலில் போட்டியிடுகின்றனர்.
இதேவேளை, அதிகமான வேட்பாளர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது. சிறிலங்கா பொதுஜன முன்னனி கட்சியில் 85 பேர் போட்டியிடுகின்றனர்.
இதேபோல, ஐக்கிய மக்கள் சக்தியில் 73 வேட்பாளர்களும், ஐக்கிய தேசியக் கட்சியில் 16 வேட்பாளர்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பில் 13 வேட்பாளர்களும், தேசிய மக்கள் சக்தியில் 5 வேட்பாளர்களும், ஏனைய கட்சிகளில் இருந்து 6 வேட்பாளரும் இம்முறை போட்டியிடுகின்றனர்.