தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் 73 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளில் இருந்து கீழ் மட்ட பதவிகள் வரையில் இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் நால்வர், பொலிஸ் அதிகாரிகள் 20 பேர் மற்றும் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கு மேலதிகமாக உதவிப் பொலிஸ் அதிகாரிகள் 24 பேர் மற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் 22 பேருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.