கல்முனைப் பொலிஸ்பிரிவுக்குட்பட்டபெரியநீலாவணை பிரதான வீதியில் அதிக நிறையுடன் இறைச்சிக்கோழிகளை ஏற்றிவந்த கோழிலொறியானது வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகாமையில் உள்ள வடிகாலுக்குள் பாய்ந்துள்ளது.ஏறாவூரில் இருந்து இறைச்சிக் கோழிகளை ஏற்றிக்கொண்டு கல்முனைக்கு புறப்படுகையில் பெரியநீலாவனையில் நித்திரைத் தூக்கத்தினால் வேகக்கட்டுப்பாட்டையிழந்தும், வீதியில் எதிரே நின்ற மீன் வியாபாரியை மயிரிழையில் விபத்தை ஏற்படுத்தாமல் தப்பிச்சென்று இவ்வாறு விபத்துக்குள்ளானது.
இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை(29) காலை 6.15 மணியளவில் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியநீலாவணையில் இடம்பெற்றுள்ளது.இதனால் வாகனத்தைச் செலுத்தி வந்த சாரதி மற்றும் உதவியாளர் மயிரிழையில் எதுவித காயங்கள் இல்லாமல் உயிரோடு மீட்கப்பட்டுள்ளார்கள்.இதனால் வடிகால்கள்,வாகனங்கள்,மோட்டார்சைக்கிள் பகுதியளவு சேதமடைந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக கல்முனை போக்குவரத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.