நிலக்கடலை விதை உற்பத்தி செய்கை இம்முறை வெற்றியளித்துள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் நிதியுதவியுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் கொம்மாதுறை தீவு பகுதியில்; செய்கை பண்ணப்பட்ட விதை நிலக்கடலை அறுவடை விழா விவசாய போதனாசிரியர் பீ. ரவிவர்மன் தலைமையில் நடைபெற்றது.
திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் ஈ.சுகந்ததாசன், பாடவிதான உத்தியோகத்தர் என். விவேகானந்தராஜா , விவசாய போதனாசிரியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலக்கடலை செய்கைக்கான விதைகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் மண்டூர், செட்டிபாளயம், தாந்தாமலை, ஆயித்தியமலை, கரடியனாறு, தியாவட்டவான், கிரான், வந்தாறுமூலை மற்றும் காயான்குடா ஆகிய ஒன்பது பிரதேசங்களில் 50 ஏக்கர் நிலத்தில் செய்கை பண்ணப்பட்டுள்ளது. 
இதன்மூலம் சுமார் 20 ஆயிரம் கிலோ கிராம் விதை நிலக்கடலை எதிர்பார்க்கப்படுவதாக விவசாய திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

Related posts