மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பார் வீதியில் அமைந்துள்ள குறுக்கு வீதியானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட கம்பெரலிய நிகழ்ச்சித் திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் கொங்கிறீட் வீதியாகப் புனரமைக்கும் பணிகள் (19) ஆரம்பித்து வைக்கப்பட்டன.
மேற்படி வட்டார உறுப்பினரால் பாராளுமன்ற உறுப்பினரிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க மேற்படி வீதி புனரமைப்பிற்காக கம்பெரலிய திட்டத்தினூடாக 02 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி இவ்வீதி புனரமைப்பு பணிகள் அரசடி சனசமூக நிலையம் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை ஆகியவற்றின் இணைப் பங்களிப்புடன் இன்று ஆரம்பிக்கப்பட்டது.
இவ்வீதி அபிவிருத்தி செயற்திட்டத்தினை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், மாநகர முதல்வர் தி.சரவணபவன், மாநகரசபை உறுப்பினர்களான சி.பாக்கியநாதன், இ.சந்திரகுமார் மாநகர பொறியிலாளர் திருமதி. சித்திராதேவி லிங்கேஸ்வரன், தொழில்நுட்ப உத்தியோகத்தர் ராஜ்குமார் உட்பட பலரும் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தனர்.
20 மில்லியன் பெறுமதியில் மட்டக்களப்பு பார்வீதியின் குறுக்கு வீதி புனரமைப்பு…