மட்டக்களப்பு, அட்டாளைச்சேனை ஆசிரியர்கலாசலைகளின் விரிவுரையாளராக இருந்த உலகறிந்த கல்வியலாளர் மண்டூரைச்சேர்ந்த கலாநிதி கோணமலை கோணேசப்பிள்ளை அவர்கள் 15 ஆம்திகதி செவ்வாய்க்கிழமை மரணமடைந்துள்ளார்.
இவர் சித்தவைத்தியர் ஆசிரியர் கோணாமலை அழகம்மா தம்பதியினரின் மகனாக மண்டூரைப் பிறப்பிடமாகக் கொண்டு தனது ஆரம்பக்கல்வியை மண்டூர் ஆரம்பப் பாடசாலையில் கற்று புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து மட்டக்களப்பு சிவானந்தாப்பாடசாலையில் கற்று கணித ஆசிரியாரக இருந்து பின்னர் அட்டாளைச்சேனை மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலைகளில் விரிவுரையாளராக கடமையாற்றியிருந்தார்
இலங்கையில் பரீட்சைத்திணைக்களத்தில் பரீட்சகராகவும் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நிருவாக உறுப்பினராகவும் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தணிக்கைக்குழு உறுப்பினராகவும் இருந்து சேவையாற்றியதுடன் அகில இலங்கை இந்துமாமன்றம் கொழும்பு தமிழ்ச்சங்கம் ஆகியவற்றின் உறுப்பினராகவும் திறந்த பல்கலைக்கழகத்திலும் தேசியகல்வி நிறுவகத்திலும் விரிவுரையாளராகவும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வருகைதரு விரிவுரையாளராகவும் சேவையாற்றியதுடன் கொலம்பியா பல்கலைக்கழகம் இங்கிலாந்து கேம்பிறிஜ் பல்கலைக்கழகத்திலும் விரிவுரையாளராக பல ஆண்டுகள் சேவையாற்றியவர்.
அத்தோடு கணிதத்தின் இந்துக்களின் பங்களிப்பு இலங்கை பல்கலைக்கழகத்தின் கல்வி போன்ற பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளையும் வெளியிட்டுவைத்தவர் .