நாடாளுமன்றத்தில் 29,174 மில்லியன் ரூபாய் பெறுமதியான குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் நேற்று(செவ்வாய்கிழமை) பிரதி சபாநாயகர் தலைமையில் கூடிய போதே இந்த குறைநிரப்பு பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கடனை மீள செலுத்துவதற்காக 6500 மில்லியன் ரூபாய் இந்த குறைநிரப்பு பிரேரணையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதே வேளை ஆலோசகர்களை இணைத்துக்கொள்வதற்காக 300 இலட்சம் ரூபாய் நிதியை இதில் ஒதுக்குமாறும் கோரப்பட்டுள்ளது.