(எஸ். சதீஸ்)
ஆரம்ப கைத்தொழில்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகே அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் காரைதீவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட மாவடிப்பள்ளி கிராமத்தில் நெசவு தொழிலை மேற்கொள்ளும் 28 பயனாளிகளுக்கு சறுக்கால் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலக முன்றலில் (21) காலை பிரதேச செயலாளர் திரு. சிவஞானம் ஜெகநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அமைச்சர் அவர்களின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ஜனாப் எம்.லத்தீப், மாவடிப்பள்ளி இணைப்பாளர் ஜனாப். எம். அஸ்வர் அவர்களும் காரைதீவு பிரதேச செயலக கணக்காளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், சமூக சேவை உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு உதவிகளை வழங்கி வைத்தனர்.
கடந்த வருட இறுதியில் அம்பாறை மாவட்ட செயலகத்தின் நிதி ஒதுக்கீட்டில் மேசன், தையல், சலூன், மெக்கானிக் தொழில்களை மேற்கொள்ளும் தெரிவு செய்யப்பட்ட 08 பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவி பொருட்களும் இந்நிகழ்வில் வழங்கிவைக்கப்பட்டது.
அத்துடன் இந்நிகழ்வில் விசேட தேவையுடையவர்களுக்கான வாழ்வாதார உதவிக் கொடுப்பனவு தலா 25,000 ரூபாய் வீதம் இரு பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.