வீதியினை புனரமைத்துத் தருமாறு கோரி புதன்கிழமை பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்படனர்.

 (சதீஸ்)
 
கிரான் – புலிபாந்த கல் பிரதான வீதி சுமார் 5 கிலோ மீற்றர் தூரம் செப்பனிடப்படாது காணப்படுவதனால் பொது மக்கள் மற்றும் அரச ஊழியர்கள் பெரும் சிரமத்தினை எதிர்நோக்கிவருகின்றனர்.
 
மழை காரணங்களில் இவ்வீதியால் வெள்ளம் பெருக்கெடுப்பதனால் இயந்திர படகுகள் மூலமாகவே போக்குவரத்து நடைபெறுகிறது.  
 
குறித்த பிரதேச செயலாளர் பிரிவில் எழுவான் கரையையும் படுவான் கரையையும் இணைக்கும் குறித்த பிரதான வீதியில் படுவான்கரை பிரதேசத்திலே 2500 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிப்பதுடன் 11 கிராமசேவகர் பிரிவுகளும் காணப்படுகின்றன
 
 
ப்பிரதேசத்திலே 5000 ற்க்கு ஏக்கருக்கு மேற்பட்ட விளை நிலங்களும் 2000 ற்க்கு மேற்பட்ட சேனைப்பயிற்செய்கை நிலம் காணப்படுவதுடன் 10000 ற்கும் மேற்பட்ட கால்நடைகளும் காணப்படுகின்றன, அத்தோடு 14 பாடசாலைகளும், கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகம், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், விவசாய அபிவிருத்தி அலுவலகம் போன்ற காணப்படுகிறன்றன இதனால் தினமும் இவ்வீதியினை ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
 
 பிரதேச செயலகத்திற்கு வருகை தந்த பொது மக்களின் ஒருவரான கிரான் பகுதியை சேர்ந்த வேலுப்பிள்ளை தேவி கருத்து தெரிவிக்கையில் – கோறளைப்பற்று தெற்கு (கிரான்) பிரதேச செயலகத்திற்கு செலும் பாதை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
 
 இதனை புனரமைத்து தருவதாக காலத்துகாலம் எங்களுக்கு கதை கூறி அரசியல்வாதிகளும் ஏமாற்றி வருகிறார்கள். இந்த பாதையினுடாக போக்கு வரத்து செய்வது மிகவும் ஆபத்தாவே உள்ளது. இதுவரை மூன்று பெண்களின் கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது.   
 
பிரதேச செயலக ஊழியர்கள் கருத்து தெரலிவிக்கையில் – நாடளாவிய ரீதியில் வறுமையில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்த பிரதேச செயலகப் பரிவு அபிவிருத்தி அடையாத ஒரு நிலையில் தொடர்ந்தும் காணப்படுகிறது.
 
குறித்த வீதியைப் பயன்படுத்துபவர்கள் மிகவும் சொல்லுண்ணா துயர்களை தினமும் அனுபவித்து வருகின்றோம்.
கற்பம் தரித்த பெண்கள் இந்த வீதியை பயன்படுத்தும் போது கரு சிதைவடைந்த சம்பவங்கள் பல இடம்பெற்றுள்ளன.
 
 
 
அரச ஊழியர்களுக்கான பயணம் செய்வதற்கான பேருந்து சேவை நடைபெறுகின்ற போதிலும் வெள்ள காலத்தில் சேவை நடைபெறாது. இதனால் நாங்கள் மாற்று வழிகளை நாடவேண்டிய நிலையிலேயே உள்ளோம். முற்சக்கரவண்டியில் செல்வதானால் 400 ரூபாய் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.
 
 
இவ்விடயம் தொடர்பாக  அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளிடம் பல முறை முறையிட்ட போதிலும் இதுவரை எந்தவித தீர்வும் பெற்றுத்தரவில்லை என்றார்.
 
 
காவனயீர்ப்பு போராட்டத்தின் இறுதியில் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை பிரதேச செயலாளர் சு.ராஜ்பாபுவிடம் கையளித்தனர்
 
மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. – ‘மட்டக்களப்பு – கோறளைப்பற்று தெற்கு (கிரான்) பிரதேச செயலகத்தில் எழுவான் கரையையும் படுவான் கரையையும் இணைக்கும் பிரதான பாலமாக கிரான் பாலம் காணப்படுவதுடன் கிரான் பாலத்தில் இருந்து படுவான் கரைக்குச் செல்லும் பாதையின் ஊடாக பயணிக்கும் மக்களின் தொகையும் அதிகமாக காணப்படுகின்றது.
 
 இப் படுவான்கரை பிரதேசத்திலே 2500 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிப்பதுடன் 11 கிராமசேவகர் பிரிவுகளும் காணப்படுகின்றன இப்பிரதேசத்திலே 5000 ற்க்கு ஏக்கருக்கு மேற்பட்ட விளை நிலங்களும் 2000 ற்க்கு மேற்பட்ட சேனைப்பயிற்செய்கை நிலம் காணப்படுவதுடன் 10000 ற்கும் மேற்பட்ட கால்நடைகளும் காணப்படுகின்றன, அத்தோடு 14 பாடசாலைகளும், கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகம், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், விவசாய அபிவிருத்தி அலுவலகம், போன்ற பொது நிறுவனங்கள் இருந்த போதும் இப்பாதையானது பன்னெடுங் காலமாக மிகவும் மோசமான நிலையில் குன்றும் குழியுமாக மக்கள் பயணிக்க முடியாத நிலையில் காணப்படுகின்றது. இந்த துர்ப்;பாக்கிய நிலைக்கு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களாகிய நாங்களும்  விதிவிலக்கல்ல.
 
 
வீதி மோசமான நிலையில் பழுதடைந்து காணப்படுகின்றமையால் உத்தியோகத்தர்கள் சீரான போக்குவரத்து வசதியினை பெற்றுக்கொள்வதில் சிரமப்படுகின்றோம். அது மட்டுமல்லாது தற்போது காலை வேளையில் வருகை தரும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து மாலை வேளையில் பெரும்பாலும் வருகை தருவதில்லை இதனால் அலுவலக கடமைக்கு வருகின்ற உத்தியோகத்தர்கள் கடும் சிரமத்தின் மத்தியிலேயே வீடுசெல்ல வேண்டியுள்ளது, குறிப்பாக பெண் உத்தயோகத்தர்கள்.  
 
வீதியின் மோசமான நிலை காரணமாக வேறு போக்குவரத்து சாதனங்களைப் பயன்படுத்தும் உத்தியோகத்தர்களும் வீதியின் மோசமான நிலையினால் விபத்துக்களுக்குள்ளாகுவதுடன் (விபத்துக்குள்ளான உத்திகோகத்தர்கள் தற்போதும் உபாதைகளுடன் காணப்படுகின்றனர்) உடல்ரீதியான உபாதைகளுக்கும் உள்ளாவதுடன் வீதியின் மோசமான நிலை காரணமாக பெண் உத்தியோகத்தர்கள் மோட்டார் சைக்கிள் பயன்படுத்த முடியாத நிலையும் காணப்படுகின்றது.
 
 
இவ்வீதியின் மோசமான நிலையினால் வெள்ள காலங்களில் வெள்ள நீரானது வீதியினை மேவி செல்வதனால் படகுச்சேவை இடம் பெறும் காலங்களில் கர்ப்பிணிப் பெண்கள், விசேட தேவைகள் உடையோர் பொதுமக்கள் என பல்வேறுபட்ட மக்களும் நாங்களும் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.
 
 
 
இவ்வீதியின் தன்மையினை காரணங்காட்டி இடமாற்றத்தினை ஏற்று வருவதற்கு உத்தியோகத்தர்கள்  மறுக்கின்றனர் இருந்த போதும் பல்வேறுபட்ட இன்னல்களை சந்தித்து 5 வருடங்களுக்கு மேல் கடமையில் இருக்கும் நாங்கள் இடமாற்றத்தினை கோருகின்ற போது பிரதேச மட்டத்திலும் ஏனையவர்களாலும் பதிலாள் இல்லாமல் விடுவிக்க முடியாது என மறுக்கின்றனர் எனவே இதற்கான உரிய நடவடிக்கையினை பெற்றுத்தருமாறும் தங்களை மிகவும் தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
 
 இவ்வீதியானது பல்வேறுபட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக காணப்படுகின்ற இப்பாதையே ஆகும் இருந்தபோதும் பல்வேறு தரப்பினரும் வீதியானது திருத்துவதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக வாக்குறுதிகளை வழங்குகின்றனர் ஆனால் இதுவரை அது நடைபெற்றதாக இல்லை எனவே  எமது கஷ்டங்களையும் நாங்கள் அனுபவிக்கும் சிரமங்களையும் கருத்தில் கொண்டு எதிர்வரும் காலங்களில் சீரன போக்குவரத்து வசதியினை ஏற்படுத்தி தருவதற்கு ஆவண செய்வதுடன் கிரான் தொடக்கம் புலிபாயந்;தகல் வரையான வீதியினை உடன் போக்குவரத்திற்கு உகந்த வகையில் செப்பனிட்டுதருவதற்கு ஆவண செய்யுமாறு தங்களை பணிவாக வேண்டி நிற்கின்றோம். அந்த மகஜரில் குறிப்பிட்டப்பட்டுள்ளது
 
பிரதேச செயலக ஊழியர்கள் பகல் 11 மணி வரை பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதன் காராணமாக தமது தேவைகளின் நிமிர்த்தம் தூர பிரதேசங்களிலிருந்து வருகை தந்த பொதுமக்கள் பொரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
????????????????????????????????????

Related posts