மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு பிரதேசத்திலுள்ள அரச வைத்தியசாலைகளிலும் வியாழக்கிழமை 22ம் திகதி வைத்திய அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இப் பணிப் புறக்கணிப்பு நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.
மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்திலுள்ள நாவற்காடு பிரதேச வைத்தியசாலை, தாண்டியடி பிரதேச வைத்தியசாலை மற்றும் கிராமிய வைத்தியசாலைகளில் இன்றையதினம் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இருந்தபோதிலும் சிறுவர், மகப்பேற்றுப்பிரிவு போன்ற தீவிர சிகிச்சைகள் நடைபெறும் எனவும் வைத்தியர் சங்கத்தினர் தெரிவித்தமைக்கமைவாக அப் பிரிவுகள் இயங்கியது.
மருந்து வகைகள் பெருமளவில் பற்றாக்குறையாக இருத்தல், மருத்துவ கல்விக்கு ஆகக் குறைந்த தரத்தை அறிவிக்காமை, டாக்டர்களுக்கான நடவடிக்கை குறிப்பை மாற்றியமைத்தமை, விஞ்ஞான பாடங்களில் உயர்தரம் கூட சித்தியடையாதவர்களுக்கு மருத்துவ நியமனங்களை வழங்க சட்டவிரோத முயற்சிகள் உள்ளிட்டபல காரணங்களுக்காகவே இவ் வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளனர்.