அம்பாறை மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் பணி பகிஷ்கரிப்பு

(எஸ்.குமணன்)
 
அம்பாறை மாவட்ட    அரச வைத்திய அதிகாரிகள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டத்தில்   ஈடுபட்டுள்ளனர்.
 
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில்   ஒரு நாள் அடையாள பணி பகிஷ்கரிப்பு போராட்டம்  வியாழக்கிழமை  (22) முன்னெடுக்கப்பட்டது.காலை 8 மணிக்கு ஆரம்பமான குறித்த பணி பகிஷ்கரிப்பு போராட்டம் நாளை (23) காலை 8 மணி வரை இடம்பெறும்.
 
இந்த நிலையில் கல்முனை ஆதார    வைத்தியசாலை மற்றும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை ,நிந்தவூர் ஆதார வைத்தியசாலைகளில்    கடமையாற்றுகின்ற வைத்தியர்களும் ஒரு நாள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுகளில் எவ்வித பணிகளும் இடம் பெறவில்லை. தூர இடங்களில் இருந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வந்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
 
எனினும் அவசர சிகிச்சை பிரிவுகளின் செயற்பாடுகள் வழமை போல் இடம்பெற்று வருகின்றது. சிகிச்சை பெற வைத்தியசாலைக்கு வருவோர் அவசர தேவை கருதி நோயாளர் விடுதிகளில் தங்க வைத்து சிகிச்சை வழங்கப்படுகின்றது.
 
அரச வைத்தியசாலைகளில் நிலவும் பாரிய மருந்து தட்டுப்பாடு மற்றும் தரம் குறைந்த மருந்துகள் வழங்கப்படுகின்றமை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரியும்இ கல்வி பொதுத்தராதர உயர் தரத்தில் 3 பாடங்களிலும் சித்தி பெறாத சிலரை வைத்தியர்களாக நியமித்து நோயாளர்களின் உயிர்களை ஆபத்தில் தள்ளும் அமைச்சரின் சதி முயற்சிகளுக்கு எதிராகவும்இ மற்றும் மேலும் சில காரணங்களை முன் நிறுத்தியும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடு முழுவதிலும் குறித்த பணி பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
எனினும்  இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அரச வைத்திய அதிகாரிகள் ஒன்றியம் ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை என தெரிவித்துள்ளனர்.
 

Related posts