கல்முனைகுடியில் கஞ்சா பொதியுடன் நடமாடிய நால்வருக்கு விளக்கமறியல்

அம்பாறை மாவட்டம்  கல்முனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனைக்குடிப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கஞ்சா பொதியுடன்  கைதான நான்கு இளைஞர்களையும்  எதிர்வரும் ஒக்டோபர் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு   கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.

 புதன்கிழமை(25) மாலை மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கபெற்ற  இரகசியத் தகவல் ஒன்றை அடுத்து கல்முனைக்குடிப் பிரதேசத்தில் வசிக்கும்  நான்கு இளைஞர்களும் கடற்கரை வீதியில் வைத்து  கைதுசெய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 21கிராம்,25 கிராம், 30 கிராம்,25கிராம் போன்ற நிறைகளுடன் கூடிய கஞ்சாப் பொதிகள் கைப்பற்றப்பட்டதுடன்  கைது செய்யப்பட்ட குறித்த இளைஞர்கள் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் என்பது  விசாரணையில் தெரியவந்துள்ளது.

கல்முனை பொலிஸ் நிலைய உதவி  பொலிஸ் அத்தியட்சகர் சூரியபண்டாரவின் பணிந்துரைக்கமைய கைதானவர்களை கல்முனை உப பொலிஸ் பரிசோதகர் வை.அருணன், சாஜண்ட் ஏ.எல்.எம்.றவூப் , பொலிஸ் உத்தியோகஸ்தர் நவாஸ் ஆகியோர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் வியாழக்கிழமை (26)காலை கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் ஒக்டோபர் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  உத்தரவிட்டது.

அண்மைக் காலமாக குறித்த பகுதியில் அதிகளவான போதைப் பாவனை மற்றும் போதைப் பொருள் வியாபாரம் என்பன அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றது. மேலும் கடந்தவாரம் அதிகளவான நிறை கொண்ட கஞ்சாப் பொதிகளுடன்(10கிலோ) தாயும் மகளும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

 

Related posts