எஸ்.குமணன்
அம்பாறை.
நாம் முயற்சி செய்யாதவரை எந்த ஒரு வழியிலும் நாம் முன்னேற முடியாது . நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ். ரங்கநாதன்.
கைத்தொழில் வணிக அமைச்சின் கீழ் இயங்குகின்ற தேசிய தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அதிகாரசபை ஊடாக நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவில் நெசவு உற்பத்தியில் ஈடுபடுகின்ற தொழில்முயற்சியாளர்களுக்கான ஒருநாள் பயிற்சி கருத்தரங்கு நாவிதன்வெளி பிரதேச கலாச்சார மத்திய நிலையத்தில் இன்று வியாழக்கிழமை (3) இடம்பெற்றது.
இதில் சந்தைப்படுத்தல் மற்றும் தொழில்மனப்பாங்கு மாற்றம் ,திறன்விருத்தி தெளிவூட்டல் திட்டமிடல் அபிவிருத்தி உத்தியோகத்தரும் வளவாளராகிய எஸ். இராஜசிங்கம் அவர்கள் தொழிற்பயிற்சியை நிறைவுசெய்த தொழில் முயற்சியாளர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
இதன்போது உரையாற்றிய நாவிதன்வெளி பிரதேச பிரதேச செயலக செயலாளர் எஸ் ரங்கநாதன் அவர்கள் அறிவுரை தெரிவிக்கையில்
நாம் முயற்சி செய்யாதவரை எந்த ஒரு வழியிலும் நாம் முன்னேற முடியாது . எமது முயற்சி அர்ப்பணிப்பு இவறின்மூலம் முயற்சிகள் கைகூடும் தரமான பொருட்களை உற்பத்தி செய்து உற்பத்தியை சந்தைப்படுத்தல் என்பன எம்மை நாடிவரும் அளவிற்கு வளர்த்துக்கொள்ள வேண்டும்.
சந்தை பொருளாதாரம் தேவைகளை அறிந்து உற்பத்தியை பெருக்கி கொள்ளவதன் மூலமே நமது தொழில் வளத்தையும் சந்தையையும் அதிகரிக்க முடியும் வெறுமனெ பொழுது போக்கிற்காக கைத்தொழில் முயற்சிகளில் ஈடுபடக்கூடாது என்ன நோக்கத்திற்காக முயற்சிகளை மேற்கொண்டோமோ அந்த நோக்கம் நிறைவேற வேண்டும் என தெரிவித்தார்.
இந்த நிகழ்விற்கு தேசிய தொழில் முயற்சி அதிகார சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.நிஜந்தன் , தொழில் பயிற்சி ஆசிரியர்கள் , அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ,தொழில் முயற்சியாளர்களும் கலந்துகொண்டனர்.