செங்கலடி பிரதேச செயலாளரின் ஊடக அடக்குமுறைக்கு இரு தினங்களுக்குள் முடிவு! பிரசாந்தன் அதிரடி

 
 
மட்டக்களப்பு செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் வில்வரெட்ணம் அவர்களினால் ஊடகவியலாளர் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடு இது குறித்து இரண்டு நாட்களுக்குள் முடிவு எடுக்கப்படும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.
 
 மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த நல்லாட்சியில் ஊடகவியலாளர் முதல் கொண்டு அரச  அதிகாரிகள் முதல் கொண்டு ஊடகவியலாளர்கள் வரை பழிவாங்கப்பட்டுள்ளனர்.
 
மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர் மீது செங்கலடி பிரதேச செயலாளர் வில்வரெட்ணம் அவர்கள் ஏறாவூர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக செய்திகள்,முகநூல்கள் ஊடாக அறியக்கூடியதாக இருந்தது. கடந்த ஆட்சியில் நல்லாட்சி என்று கூறிக்கொண்டு ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறை தொடர்ந்துள்ளது.
 
இது குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு நிச்சயம் கொண்டு வருவோம். இது குறித்து சம்பந்தப்பட்ட ஊடகவியலாளர் உடன் பேசியுள்ளேன் அதேபோல் பிரதேச செயலாளருடனும் பேச உள்ளேன், இரு தினங்களுக்குள் பிரதேச செயலாளரின் ஊடக அடக்குமுறை குறித்து முடிவு எடுக்கப்படும்.
 
இதைவிட  கல்வி அதிகாரிகள் மீதும் அரசியல் பழிவாங்கள்கள் நடைபெற்றுள்ளது.
 
குறிப்பாக தமிழ் மக்களுக்கு இன்று மிஞ்சியிருப்பது கல்வி மட்டுமே. தமிழர்கள் அறிவாயுதம் ஏந்த வேண்டும் என்று கூறிக்கொண்டு தமிழ் மக்களின் கல்வியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு குழிதோண்டி புதைத்துள்ளது.

Related posts