பொலிசாரைத் தாக்கிய பெண்கள்!

காவல்துறையினரை தாக்கியதுடன், அவர்களது கடமைக்கு இடையூறு விளைவித்த மூன்று பெண்கள் உள்ளிட்ட ஐந்து பேரை விளக்கமறியலில் வைக்க திருகோணமலை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, அவர்களை எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் இன்று உத்தரவிட்டார்.

திருகோணமலை மொறவெவ – ரொட்டவெவ பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சோதனையிட சென்ற காவல்துறையினர் மீதே இவர்கள் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Related posts