அம்பாறை மாவட்டத்தின் சவளக்கடை விவசாய போதனாசிரியர் பிரிவிலுள்ள மத்தியமுகாம்-02 கிராமத்தில் விவசாய கிணற்று நீரில் செய்கை பண்ணப்பட்ட சோளச்செய்கையின் அறுவடை விழா இன்று செவ்வாய்க்கிழமை விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
சவளக்கடை விவசாய போதனாசிரியர் திருமதி. கீர்த்திகா நித்தியதாசன் தலைமையில் தொழிநுட்ப உத்தியோகத்தர் ரீ.ரஜீதனின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சம்மாந்துறை வலய உதவி விவசாய பணிப்பாளர் எம்.பி.எம்.இர்ஷாத் மறுவயற்பயிர்களுக்கான பாடவிதான உத்தியோகத்தர் எஸ்.ஏ.எல்.பஹ்மி அஹமட் தேசிய உணவு உற்பத்திக்கான பாடவிதான உத்தியோகத்தர் ஏ.பீ.நஸ்லீம் சம்மாந்துறை வலய விவசாய போதனாசிரியர்கள் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
விவசாய திணைக்களத்தினால் வழங்கப்பட்ட விவசாய கிணறுகளின் மூலம் இவ்வாறான மறுவயற்பயிர்கள் பல சவளக்கடை விவசாய போதனாசிரியர் பிரிவினுள் விவசாயிகளால் செய்கை பண்ணப்பட்டு சிறந்த விளைச்சல் பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது