இலங்கையில் உள்ள பொதுஜன பெரமுன கட்சியானது தமிழர்களையோ அல்லது முஸ்லிம்களையோ சேர்த்து எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாது.மாறாக தனி சிங்கள வேட்பாளர்களுடன் மட்டும் 99 வீதமான இடங்களில் போட்டியிட்டு வெற்றியடைந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முழுமையான பாராளுமன்றத்தை அமைக்கும் என்று எனக்கு நம்பிக்கையிருக்கின்றது.இவ் அரசாங்கம் சுமார் பத்து ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருக்கும்.ஆனால் தமிழ் தலைமைகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தோ பிளண்டி தண்ணீரோ குடிக்கமாட்டார்கள்.இன்றைய களநிலவரத்தை உணர்ந்து செயற்பட்டால் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தியை முன்னெடுத்து தமிழர்களின் இருப்பை பாதுகாக்கலாம்.
இன்று ஒருநாளைக்கு 18 தமிழர்கள் இனம் மாற்றப்படுகின்றார்கள்.115 ஏக்கர் தமிழர்களின் நிலப்பரப்பு அபகரிக்கப்பட்டுள்ளது.நிலவளம் சூரையாடப்படுகின்றது.பிளண்டி தண்ணீர் குடிக்காத அரசியல் தலைமைகளை தமிழ்மக்கள் தெரிவு செய்தால் 10 சதம்கூட அபிவிருத்தியை மட்டக்களப்புக்கோ அல்லது கிழக்கு மாகாணத்திற்கோ கொண்டுவர முடியாது.ஆனால் முஸ்லிம் அரசியல் தலைமை புத்திக்கூர்மையாக சிந்தித்தும்,தமது சமூகம் பற்றி சிந்தித்து வாக்களித்து பேரம்பேசும் அரசியல்வாதிகளை உரீவாக்குவார்கள்.இதனால் முஸ்லிம் சமூகத்தின் பிரதேசம்,சமூகம் வளம்கொலிக்கும் பிரதேசமாக மாறும்.
வடக்கிலே உரிமையுடன் கூடிய அபிவிருத்தியை டக்ளஸ் தேவானந்தா,அங்கஜன் இராமநாதன்,விஜயகலா மகேஸ்வரன் போன்றோர்கள் முன்னெடுக்கின்றார்கள்.அங்கு வடக்கு தமிழ்தேசிய தலைமை அவர்களை ஏற்றுக்கொள்கின்றது.கிழக்கிலே உரிமையுடன் அபிவிருத்தியை முன்னெடுத்தால் துரோகி என்று பட்டம் சூட்டுவார்கள்.இது கிழக்கு மாகாணத்தின் சாபக்கேடாகும்.இன்று கிழக்கிலே 58.9வீதமாக இருந்த தமிழர்கள் 38.2வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளார்கள்.இன்னு
தமிழ்மக்களுக்கு சாத்தியப்படாத விடயங்களையும்,நடக்காத தீர்வுகளையும் கொண்டு தமிழ்சமூகத்திற்கு சாத்தியப்படுமென தமிழ்தேசிய தலைமைகள் பொய்யுரைத்து சிம்மாசனம் ஏறப்பார்கின்றார்கள்.இவ்விடயமாக தமிழ்மக்கள் விழிப்புடன் இருக்கனும்.சரணாகதி அரசியலையும்,எதிர்ப்பு அரசியலையும் தமிழ்மக்கள் கைவிட்டு இராஜதந்திர அரசியலை முன்னெடுக்கனும்.இல்லாவிட்டால் மாற்றுச்சமூகத்திடம் கையேந்தும் நிலைமை ஏற்படும்.ஏற்கனவே தமிழ்சமூகம் கிழக்கில் கையேந்தப்பட்டுள்ளது.மல்லாக்கப்