ஊரடங்குச்சட்டம் தொடர்பாக அரசின் அறிவிப்பு வெளியானது

கொழும்பு, கம்பஹா, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் 24 ஆம் திகதி காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ​
 
அதன் பின்னர் மார்ச் 24 ஆம் திகதி நண்பகல் 2 மணியளவில் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஏனைய மாவட்டங்களில் மார்ச் 23 ஆம் திகதி காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் எனவும், அதனையடுத்து தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் மீண்டும் நண்பகல் 2 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு 24 ஆம் திகதி காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
குறித்த காலப்பகுதிகளில் மதுபான சாலைகளை மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

Related posts