கொரோனா காலத்திலும் ஜீ.கே. அறக்கட்டளையின் தொடர்ச்சியான செயற்பாடுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுப்பு.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரேனா தொற்று பிரச்சினை உருவானது முதல் ஜீ.கே. அறக்கட்டளையினால் நிவாரண உதவிகள், இலவச கையுறை, முகக்கவசம் வழங்கல் போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதன் தலைவர் முன்னாள் பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினருமான கே.கருணாகரம் தெரிவித்தார்.
ஜீ.கே. அறக்கட்டளையினால் இலஙகையில் கொரோனா தொற்று ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு முதல் தடவையாக தளர்த்தப்பட்ட வேளை மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி, செங்கலடி, வாழைச்சேனை போன்ற மக்கள் கூடும் இடங்களில் கையுறை, முகமூடி, கொரொனா தொற்று விழிப்புணர்பு துண்டுப்பிரசுரம் போன்றவை வழங்ககப்பட்டது. அதனையடுத்து இச் செயற்பாடு தொடரப்பட்டு வருகிறது.
தொடர்ச்சியாக கொரொனா தொற்று விழிப்புணர்வுச் செயற்பாடுகள் துண்டுப்பிரசுரம் விநியோகம் போன்றவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.