மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகத்தினால் மக்களுக்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிவாரணப்பணியானது இன்று (10) சந்திவெளி பொது மக்களுக்கு சகாய விலையிலான உணவுப்பொதிகள் வழங்கப்பட்டுவருகின்றது.
கொரோனா நோய்த்தாக்கம் பரவாமல் இருப்பதற்காக அரசாங்கம் ஊரடங்கு சட்டம் பிறப்பித்துள்ளமையினால் கூலித்தொழில் செய்து அன்றாடம் சிவியம் நடத்தும் குடும்பங்களுக்கு அரசினால் இவ்வாறான உதவித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
உலருணவுப்பொதிகளை பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாவு மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தொடர்ந்து வழங்கிவருவதை அவதானிக்கமுடிந்தது. இச்செயல்த்திட்டமானது தங்களின் பிரதேச செயலக ஆளுகைக்கு உட்பட்ட சகல கிராமசேவையாளர் பிரிவுகளுக்கும் வழங்கப்பட்டு வருவதாக பிரதேச செயலாளர் குறிப்பிட்டார்.
இதனைத்தவிரவும் மாவட்ட செயலகத்தினால் வழங்கப்பட்ட பொதிகளை முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டு வருவதாகவு சமூர்த்திக்கொடுப்பனவுகளும் உரிய நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு மேலதிகமாக காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்கள் மற்றும் முதியோர் கொடுப்பனவு நோயாளர் கொடுப்பனவு என அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நிவாரணப்பணிகளும் கிரமமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.