சமூகசேவையாளர் வே.சிவபாதசுந்தரம் அவர்களினால் தொகுக்கப்பட்ட “ஔவையின் அமுதமொழிகள்” நூல் வெளியீட்டு வைக்கப்பட்ட

ஔவையின் அமுத மொழிகள்” நூல் வெளியீட்டு வைக்கப்பட்டது.

கல்லடி பூநொச்சிமுனையைச் சேர்ந்தவரும்,பிரபல சமூகசேவையாளருமான வேலுப்பிள்ளை-சிவபாதசுந்தரம் அவர்களினால் தொகுப்பட்ட “ஔவையின் அமுதமொழிகள்” நூல் வெளியீட்டுவிழா கல்லடி உப்போடை துளசி மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை(12.10.2018)  காலை 10.00 மணியளவில் கல்லடி இராமகிருஸ்ணமிஷன் சுவாமி ஸ்ரீமத் தக்ஷானந்தாஜீ மகராஜ் அவர்களின் ஆசியுரையுடன் “அதிபர் திலகம்” திருமதி. திலகவதி ஹரிதாஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் முதன்மை அதிதிகளாக மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கணபதிப்பிள்ளை-பாஸ்கரன்,கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் நவரெட்ணம்-வாசுதேவன் ஆகியோர்களும்,கௌரவ அதிதிகளாக கல்வி அபிவிருத்தி சமூக மேம்பாட்டு ஒன்றியத்தின் தலைவர் சி.தேவசிங்கன்,கல்லடி உப்போடை பேச்சியம்மன் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பரிபாலன சபைத்தலைவர் ச.சந்திரகுமார்,சிரேஸ்ட ஊடகவியலாளரும்,அரங்கம் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான பூபாலரெத்தினம் சீவகன் ஆகியோர்களும்,சிறப்பு அதிதிகளாக ஓய்வுநிலை கல்வி அதிகாரி சோ.சிவலிங்கம், ஓய்வுநிலை வங்கி முகாமையாளர் க.பாஸ்கரன்,மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் தி.சிறிஸ்கந்தராசா,மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதி கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறிதரன் உட்பட பொதுமக்கள்,நலன்விரும்பிகள், பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டார்கள்.

முதலில் அதிதிகளை மாலை அணிவித்து வரவேற்றார்கள்.மங்கல விளக்கேற்றல்,இறைவணக்கம்,தமிழ்மொழி வாழ்த்து,ஆசியுரை,தலைமையுரை,நூல் அறிமுக உரை,அதிதிகள் உரை,சுவாமி விபுலானந்தரின் ஆவணப் படம் திரையிடல்,நூல் பிரதிகள் வழங்குதல், நன்றியுரை என்பன இடம்பெற்றன.

இதன்போது மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட 39 பாடசாலைகளுக்கும்,மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட 30பாடசாலைகளுக்கும் ஔவையின் அமுதமொழிகள் நூல்(ஆங்கில மொழி பெயர்ப்புடன்) சமூகசேவையாளர் வேலுப்பிள்ளை-சிவபாதசுந்தரத்தினால்(கனடா) இலவசமாக வழங்கி வைக்கப்பட்டது.

Related posts