போரதீவுப்பற்றுப் பிரதேசசெயலகப்பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு வாவியின் தம்பலவற்றை ஆற்றுப்பகுதியில் சட்டவிரோதமான வகையில் மீன்பிடியில் ஈடுபட்ட நால்வர் வெல்லாவெளிப் பொலிசாரால் நேற்றுக் கைதுசெய்யப்பட்டனர்.
அண்மைக்காலமாக இப்பிரதேசத்தில் சிறிய ரங்குஸ் மற்றும் இழுவை வலைகளைப் பயன்படுத்தி சிறிய மீன் வகைகள் அழிக்கப்பட்டு வருவதனால் ;ஆப்பிரதேச மீன்பிடிச் சங்கத்தினர்களது வேண்டுகோளுக்கு அமைவாக வெல்லாவெளிப்பிரதேச நீரியல்வள பரிசோதகர் கே.தர்சனன் வெல்லாவெளிப் பொலிசாரும் இணைந்து நான்கு பேரையும் சுற்றிவளைத்து கைதுசெய்ததுடன் அவர்களிடம் இருந்த ஒருஇலட்சம் பெறுமதியான மீன்பிடி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன.
கைதுசெய்யப்பட்டவர்களை நீதி மற்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்