யூனானி முறையிலான நோயெதிர்ப்பு மருந்துகள் விநியோகம்

காத்தான்குடி கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அன்மையில் வசிப்போருக்கு யூனானி முறையிலான நோயெதிர்ப்பு மருந்துகள் விநியோகம்
 
கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிக்கும் காத்தான்குடி தளவைத்தியசாலையில் அமைந்துள்ள கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அன்மையில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு யூனானி வைத்திய முறையிலான நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் மருந்துகள் (07) யூனானி வைத்தியர் குழுவினரால் வழங்கி வைக்கப்பட்டது.
 
இலங்கையில் பரவியுள்ள கொரனா தொற்றினைக் கட்டுப்படுத்தும் முகமாக சுகாதாரத் திணைக்களம் நாட்டில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஓர் அங்கமாக கிழக்கு மாகாண உள்நாட்டு வைத்தியத் துறை ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஆர். ஸ்ரீதர் அவர்களின் வழிகாட்டலிலும் மட்டக்களப்பு மாவட்ட உள்நாட்டு வைதிய இணைப்பாளர் வைத்தியர் திருமதி ஜே. பாஸ்கர் அவர்களின் மேற்பார்வையிலும் காத்தான்குடி கொரனா சிகிச்சை பிரிவு நிலையத்தை சூழவுள்ள பிரதேசத்தில் வாழும் குடியிருப்பாளர்களுக்கும், அவ்விடத்தில் கடமையிலீடுபட்டுள்ள பொலிஸ் மற்றும் இரானுவத்தினருக்கும்  காத்தான்குடி ஆயுர்வேத  மத்திய மருந்தக மருத்துவப் பொறுப்பதிகாரி டாக்டர். எம்.எப்.எம். சில்மி தலைமையிலான வைத்தியர் குழு இம்மருந்துப் பொருட்களை விநியோகித்தது. 
 
கிழக்குமாகாண சுகாதாரத் தினைக்களத்தின்கீழ் இயங்கும் அக்கரைப்பற்று யூனானி மருந்துற்பத்தி பிரிவினால், உடலின் நிர்பீடனத்தை அதிகரிபதற்காக தயாரிக்கப்பட்ட இம்மருந்துகளை, காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அனுசரணையுடன் யூனானி வைத்தியர்களான டாக்டர் ஏ.ஆர்.எம். ரிஸ்வி, டாக்டர் எம்.என்.எம். முஸ்தாக் மற்றும் டாக்டர் எம்.என்.எம். சபீர் ஆகியோர் வீடுவீடாகச் சென்று மக்களுக்கு இதனைப் பயன்படுத்துவது தொடர்பான விளக்கங்களையளித்து விநியோகித்தனர்.
 
இதன்போது பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களான ஏ.எல்.எம். றஹ்மதுல்லாஹ், ஏ.எம்.எம். பஸீர் மற்றும் ஆயர்வேத வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் காத்தான்குடி பிரதேச செலக கொரோனா தொண்டர் அணி உறுப்பினர்கள் பலரும் இணைந்திருந்தனர்.
dav

Related posts