பிரித்தானிய சைவத்திருக்கோயில்கள் ஒன்றியத்தின் வேண்டுகோளின்பேரில் மீண்டும் கத்தரிக்காய் இரட்டைநிவாரணம்.

பிரித்தானிய சைவத்திருக்கோயில்கள் ஒன்றியத்தின் வேண்டுகோளின்பேரில் மீண்டும் அம்பாறைமாவட்டத்தில் கத்தரிக்காய் இரட்டை நிவாரணச் செயற்பாடு நடைபெற்றுவருகிறது.
 
நேற்று பொத்துவில் பிரதேசத்திற்குச்சென்று ஊறணி விவசாயக்கிராமத்தில் கத்தரிக்காய் மற்றும் மிளகாய் கொள்வனவு செய்யப்பட்டது. கிலோ 30ருபா வீதம் 1500கிலோ கத்தரிக்காய்களும் கிலோ 100 ருபா வீதம் 200கிலோ மிளகாய்களும் கொள்வனவு செய்யப்பட்டது.
 
திருக்கோவில் பிரதேசசெயலாளர் த.கஜேந்திரன் பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் கல்முனைவடக்கு பிரதேசசெயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் திருக்கோவில் உதவிபிரதேசசெயலாளர் க.சதீஸ்கரன் ஆகியோர் நேரடியாக வந்து இச்செயற்பாட்டில் கலந்துகொண்டு ஆதரவளித்தனர். இவர்கள் கூடவே நின்று கத்தரிக்காய் ஆய்வதிலும் ஈடுபட்டனர்.
பிரித்தானிய சைவத்திருக்கோயில்கள் ஒன்றிய இணைப்பாளர் சோ.வினோஜ்குமார் காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கே.ஜெயசிறில் சமுகசெயற்பாட்டாளர்களான வி.ரி.சகாதேவராஜா வி.மோகன் சோ.தினேஸ்குமார் உள்ளிட்டோர் இவ்விரட்டை நிவாரணப்பணிகளில் ஈடுபட்டனர்..
 
இவ்விரட்டை நிவாரணச் செயற்பாடு கடந்த மாதத்தில் 4தடவைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. அது பொதுமக்கள் மத்தியிலும் தன்னார்வ தொண்டுநிறுவனங்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பைப்பெற்றிருந்தன.
 
பாடுபட்டு கஸ்ட்டப்பட்டு பயிர்செய்த உள்ளுர் விவசாயிகளுக்கு அவர்களதுஉற்பத்திப்பொருட்களை கொள்வனவு செய்வதன்மூலம்  நிவாரணம் வழங்கும் அதேவேளை ஊரடங்கு காரணமாக முடங்கிக்கிடக்கும் ஏழைமக்களுக்கு இலவசமாக நிவாரணமாக கத்தரிக்காய்கள் வெண்டிக்காய் மிளகாய் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts