மட்டக்களப்பு மாவட்ட உதைப்பந்தாட்ட சங்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கான நிவாரண உதவி தாய்சங்கமாகிய இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் நிதியுதவியுடன் வழங்கி வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட உதைப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் லைட்ஹவுஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வின் போது ரூபா 300,000 பெறுமதியான உலர் உணவு பொதிகள் அன்றாடம் தொழில் புரிகின்ற 26கழகங்களின் உறுப்பினர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளன தலைவர் அனுர டி சில்வா மற்றும் பொது செயலாலர் ஜனாப் ஜஸ்வர் ஆகியோரது முயற்சியினால் வழங்கப்பட்ட நிதியினூடாக மேற்படி விநியோக நடவடிக்கையை மட்டக்களப்பு மாவட்ட உதைப்பந்தாட்ட சங்க(BDFA) உறுப்பினர்கள் முன்னெடுத்திருந்தனர்.
இந்நிகழ்வு தலைவர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் இடம்பெற்றது. பொதுச்செயலாளர் திரு.காந்தன், நிருவாக செயலாளர் திரு.கௌரீஸ்வரன், உபதலைவர்களான திரு.ஈஸ்வரன், ஜனாப்.லத்தீப் ஹாஜியார், திரு கலைவேந்தன், கணக்கு பரிசோதகர் திரு மனோகரன், திரு நிமலன் மற்றும் நிர்வாக உறுப்பினர்களும் கழகங்களின் தலைவர்களும் கலந்து சிறப்பித்தனர்.