அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட வருடாந்த இப்தார் நிகழ்வு நேற்றுமாலை (26) நிந்தவூர் பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில்,சம்மேளனத்தின் தலைவர் கலாபூசனம் மீரா இஸ்ஸதீன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வவுனியாமாவட்ட உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.அப்துல்லாஹ்,மற்றும் விசேட அதிதிகளாக சம்மாந்துறை பிரதேசசெயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா,நிந்தவூர் பிரதேசசபைத் தவிசாளர் எம்.ஐ.எம்.தாகிர்,பிரதித் தவிசாளர் வை.எல். சுலைமாலெவ்வை ஆகியோர்களுடன் ஊடகவியலாளர்கள்,பாடசாலை அதிபர்கள்,மற்றும் காத்தான்குடிமீடியாபோரத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
நிகழ்வில்,மௌலவி இத்ரீஸ் ஹளனினால் நோன்பின் மகத்துவமும்,ஊடகமும் என்றதலைப்பில் சொற்பொழிவு இடம்பெற்றதோடு,
வவுனியாமாவட்ட உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.அப்துல்லாஹ் வினால்,மனிதன் மனிதனுக்கு எவ்வாறு கௌரவமளிக்கவேண்டும் எனும் தொனிப் பொருளில் விசேட சொற்பொழிவு ஒன்றும் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.