மட்டக்களப்பு மாவட்டத்தில் 2840 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 07 பேர் உயிரிழந்துள்ளதாக பிராந்திய தொற்று நோயியலாளர் Dr. தர்ஷினி காந்தரூபன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவில் டெங்கு பரவி வருவதினால் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் (27.05.2018) மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள கேட்போர் கூடத்தில் விஷேட கலந்துரையாடலொன்று நடைபெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார்.
14 சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் மட்டக்களப்பு,ஏறாவூர்,செங்கலடி,ஓட்டமாவடி,கோரளைப்பற்று, களுவாஞ்சிக்குடி போன்ற பகுதிகளில் அதிகளவில் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் ஜனவரி மாதத்தில் ஐநூற்றி தொன்னூற்றி(598) எட்டு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், பெப்ரவரியில் நானூற்றி தொன்னூற்றி ஆறு(496) பேரும், மார்ச் மாத்தில் ஐநூற்று நாற்பத்தெட்டு(548) பேரும், ஏப்ரல் மாதத்தில் ஐநூற்றி எழுபத்தேழு (577) பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மே மாதம் அறுநூற்றி இருபத்தொறு(626) டெங்கு நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவில் பரவி வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்த அனைத்து திணைக்களங்களும் முன்வர வேண்டுமெனவும் அரச திணைக்களங்களின் ஊடாக பொதுமக்களுக்கு விழிப்பூட்டல்களை நடாத்த வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண சுகாதார திணைக்ளத்தின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்ஸார் மாகாண பணிப்பாளர் Dr.கே.முருகானந்தம் கிழக்கு மாகாண சமூக வைத்திய நிபுணர் Dr. அருள்குமரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கினை கட்டுப்படுத்தும் நோக்கில் டெங்கினை கட்டுப்படுத்தும் படையணி (Dengue control task force) ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இக்குழு எதிர்வரும் புதன்கிழமை கிழக்கு மாகாண ஆளுநரை சந்திப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ் Dengue control task force செயற்குழுவில் டாக்டர்களான Dr. தர்ஷினி காந்தரூபன் ( Regional Epidemiologist) Dr M அச்சுதன் ( MO / Disaster management) Dr G. சுகுணன் ( MS, Base Hospital Kaluwanchikudy) Dr. ஜாபீர்( MS Kattankudy) Dr மதன் (MS Valaichenai), Dr முனாஸ் (MS Eravur) உட்படபிராந்திய சுகாதாரஅதிகாரிகள் மாநகர ஆணையாளர் பிரதேசசபைகளின் செயலாளர்கள் பொலிஸ் உயர்அதிகாரி இராணுவ உயர்அதிகாரி உட்பட பலர் அங்கத்துவம் வகிக்கின்றனர்.