விவசாய திணைக்களத்தால் வெல்லாவெளியில் கபில நிறத் தாவரத் தத்தியை கட்டுப்படுத்துவதற்கான விழிப்பூட்டல் நிகழ்வு நடைபெற்றது.
மட்டக்களப்பு விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாலையடிவட்டை விவசாய போதனாசிரியர் பிரிவிலுள்ள நவகிரிநகர் கிராமத்தில் கபிலநிறத் தாவர தத்தியை கட்டுப்படுத்துவதற்கான விழிப்பூட்டல் நிகழ்வு இடம்பெற்றது.
பாலையடிவட்டை விவசாய போதனாசிரியர் ரீ.கோபி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தெற்கு வலய உதவி விவசாய பணிப்பாளர் ரீ.மேகராசா விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்களான பீ.உதயகுமாரன் ஈ.மகாதேவி பொதுச் சுகாதார பரிசோதகர் பீ.ராஜேஸ்வரன் கிராம சேவகர் ரீ.லக்ஷகுமார் விவசாய போதனாசிரியர்கள் தொழிநுட்ப உதவியாளர்கள் மற்றும் பெருமளவான விவசாயிகளும் கலந்து கொண்டனர்.
நெற்செய்கையில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் கபிலநிறத் தாவர தத்தியால் ஏற்படும் அறக்கொட்டி தாக்கத்தை எவ்வாறு ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்த முடியுமென விவசாய போதனாசிரியர்களால் தெளிவான விளக்கங்கள் வழங்கப்பட்டதோடு நேரடியாக வயல் நிலத்தில் அறக்கொட்டி தாக்கத்தின் அளவை எவ்வாறு இனங்காண்பதெனவும் அதற்கேற்ற பொருத்தமான கட்டுப்பாட்டு நடைமுறைகள் எவையெனவும் தெளிவுபடுத்தப்பட்து. இந்நிகழ்வானது உரிய சுகாதார நடைமுறைகளோடு நடைபெறமை குறிப்பிடத்தக்கது