2001 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களால் அப்போதிருந்த ஊடகவியலாளர்களுடனும் இணைந்து அரசியல் யுத்தியாக உருவாக்கப்பட்டதுதான் இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பாகும்.அதிலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரிவர தனது அரசியல் கடமையை செய்து வருகின்றது.2009 ஆம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னதும் இக்கூட்டமைப்பு தனது கடமையைச் செய்து வருகின்றது. 2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் அண்டு வரை அரசாங்கத்தின் எதிரே இருந்து எமது உரிமைக்காகப் போராடினோம் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தற்போதைய மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்று(21)ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
அப்போதிருந்த மகிந்த ராஜ பக்ஷ அரசாங்கத்திடம் 18 தடவைகள் நாங்கள் போச்சுவார்த்தை நடாத்தினோம்.இறுதியாக அந்த அரசாங்கம் எம்மை ஏமாற்றியது.அதனால்தான் 2015 இல் நாங்கள் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்து ஒரு பதிய ஜனாதிபதியை கொண்டு வருவதற்கு ஒத்துழைப்பை வழங்கினோம்.பின்னர் நாம் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் பெற்று நாங்கள் செயற்பட்டாலும்,எமது மக்களின் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காக அந்த அரசாங்கத்திற்கு சில விடையங்களுக்கு மாத்திரம் ஆதரவு கொடுத்தோம்.
எமது மக்கள் அரசியல் உரிமையுடன் சேர்த்து அபிவிருத்தியும் தேவை என விரும்புகின்றார்கள்.அதற்கா வேண்டி நாங்கள் பலவாறாகச் செயற்பட்டோம். முன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் செய்யாத அபிவிருத்திகளை நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு தவறுகளைத் தட்டிக் கேட்டுக் கொண்டே அபிவிருத்திகளைச் செய்துள்ளோம்.
தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைக்க வேண்டும் என்பதற்காக சில சில்லறைக் கட்சிகளும், சுயேட்சைக்குளுக்ககும் அனுப்பிவிடப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் பெறுகின்ற வாக்குகள் ஒரு ஆசனத்தைக்கூடப் பெறமுடியாது.இது மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறும் நான்காவது ஆசனத்திற்குரிய வாக்கு பிரிக்கப்பட்டு அது வேறு சமூகத்திற்குச் சென்றுவிடும். இதனை எமது மக்கள் நன்கு உணர்ந்து கொள்ளவேண்டும். மாகாபாரதத்தில் குறிப்பிட்டது போன்று “கடமையைச் செய் பலனை எதிர்பாராதே” என்பது போன்று தமிழ் தேசியம் வெல்ல வேண்டும் என்பதற்காக பல மாவீரர்களும், பொதுமக்களும் இந்த மண்ணில் விதைக்கப்பட்டுள்ளார்கள், பலர் பல தியாகங்களைச் செய்துள்ளார்கள்.இவ்வாறானவர்களி
தொல்பெருள் என்ற போர்வையில் பெரும்பான்மை இனத்தவர்களை மாத்திரம் அதில் உள்டக்கி 56 இடங்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் அடையாளப்படுத்தி அதனை கபழீகரம் செய்வதனை எதிர்த்து நிற்கின்ற கட்சி என்றால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாத்திரம்தான்.
எமது அபிவிருத்திச் செயற்பாடுகளில் இலஞ்சம் இல்லை, ஊழல் இல்லை. குத்தகை ஒப்பந்தக் காரர்களுக்கு ஒப்பந்தங்களை வழங்கிவிட்டு எமது பைகளை நிரப்பியவர்கள் நாங்கள் அல்ல.ஆனால் சிலர் தமக்கு அபிவிருத்திக்கு ஒதுக்கிய ஒதுக்கீடுகளை குத்தகைக்கார்களிடம் கொடுத்து பணம் பெற்றவர்கள் உள்ளார்கள்.ஒரு சதம் கூட இலஞ்சம் பெற்றால் நிரூபியுங்கள் இப்போதே வேட்பாளர் போட்டியிலிருந்து விலகிச் செல்கின்றோம்.
எனவே நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்மக்கள் நூறு வீதம் வாக்களித்து தமிழர்களின் பிரதிநிதிகளை அதிகரிக்க வாய்ப்புள்ளது.அனைவரும் கோபம்,குரோதங்களை மறந்து தமிழ்தேசிய உணர்வுக்கு மதிப்பளித்து வாக்குரிமையை வீட்டுச்சின்னத்துக்கு வாக்களியுங்கள்.தமிழர்களுக்கு வீடுதான் முக்கியத்துவம்.ஒற்றுமையுடன் கிழந்தெழுந்து தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிப்பது தார்மீக கடமையாகும் என அவர் இதன்போது தெரவித்தார்.